உளவுத்துறை எச்சரிக்கை? தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு Z பிரிவு பாதுகாப்பு! – Rajiv Kumar

28

Rajiv Kumar: இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இப்போது இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆக இருப்பவர் ராஜிவ்குமார். வரும் 19ம் தேதி முதல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராஜிவ்குமார் செய்துள்ளார்.

இந்நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் ராஜிவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

என்ன மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. CRPF கமாண்டோக்கள் உட்பட மொத்தம் 33 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர்