Without Towers: சீனா, கடந்த சில ஆண்டுகளாக செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாகச் செயற்கைக்கோள் மூலமாக பேசும் வசதியைக் கொண்டுவர ஆய்வு மேற்கொண்டது. 2016ஆம் ஆண்டுமுதல் இத்தகைய சோதனையில் ஈடுபட்டு வந்த சீனா, தற்போது இதில் வெற்றிபெற்றதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்மார்ட்போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
தரையில் செல்போன் டவர்கள் இல்லாமலேயே செல்போன்களில் பேசலாம் எனக் கூறப்படுகிறது. தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாகச் செயற்கைக்கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படும்போதுகூட, எந்த இடையூறும் இன்றி தொலைத்தொடர்பு இருக்கும்