சேலத்தில் பயங்கர கலவரம்: பற்றி எரியும் கடைகள்!

27

சேலம் தீவட்டிப்பட்டி கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர்.

இப்போது நாங்களும் கோயில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் இரு தரப்பும் மோதிக்கொண்டனர்.

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகளில் தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் சில வாகனங்களும் தீக்கிறையானது.