காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ! – Doordarshan

34

Doordarshan: மத்திய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் செய்தி சேனலான டிடி நியூஸ் பிராண்டிங், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாக கடந்த ஏப்ரல் 16ம் தேதி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. பாஜக தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர் என கூறினர்.