பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் சுமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஒருவரது ஆபாசமான வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், ‘மார்பிங்’ செய்து சமூசு வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி, பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசும் ‘டீப் பேக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனு மே 02 விசாரணைக்கு வந்தது. அப் போது மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மேத்தா மனுதாரர் தரப் பில் ஆஜராகி, சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோ பர வுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், “தேர்தல் கமிஷனிடம் இது தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை எந்த வொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. டீப் பேக் வீடியோக்களை யார் வேண்டுமானால் உருவாக்க முடியும்” என தெரிவித்தனர். இதையடுத்து, சமூகவலைதளத்தில் டீப் பேக் விடியோக் கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது