முகத்தில் மாதுளம் பழத்தோல் செய்யும் அற்புதம்! – Pomegranate

47

Pomegranate: பொதுவாக நாம் மாதுளம்பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் ஆயுர்வேதம் மாதுளை தோல்களை பயன்படுத்தி பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என சொல்கிறது. மாதுளை தோலில் மிக அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலி-பினால்கள் உள்ளது.

மாதுளை தோல்கள் புற ஊதா கதிரின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்றத்தை உண்டாக்கும் அறிகுறிகளைக் குறைக்கும். மாதுளை தோல் பொடியை கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் மாதுளை தோலை தூள் செய்வதும் சுலபமானது தான்.

மாதுளை தோலை கொண்டு பற்களை நன்கு பராமரிக்கலாம். மாதுளை தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு பாக்டீரியா எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது. பல் மற்றும் ஈறு சிக்கலுக்கு மாதுளையின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.