Pig Kidney: அமெரிக்காவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க வைத்துள்ளனர். இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று நோயாளிக்கு பொருத்தினர். அதன்பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அவர் வீடு திரும்பும் அளவுக்கு குணமடைந்த நிலையில் ஏப்ரல் 3ல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த செயல்முறையானது உறுப்புகளை ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றும் நவீன அறுவை சிகிச்சைக்கு உதாரணமாக மாறியுள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்கு அவசர தேவையாக வேண்டிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உறுப்பு பற்றாக்குறை நெருக்கடி நிலவுகிறது. இந்த நேரத்தில் உறுப்பு மாற்று சிகிச்சையில் கிடைத்த வெற்றியானது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.