MK Stalin: தமிழகம் தேர்தல் நிலவரம் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனுடைய நகல் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றதாக கூறப்படுவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மக்களவை தொகுதிகளில் திமுக அமைச்சர்கள் மெத்தனமாக இருப்பதாகவும் இப்படியே இருந்தால் இந்த ஐந்து தொகுதிகளை இழக்க வேண்டி வரும் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பார்த்த உடனே முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றினர். இப்போது அறிக்கையின் நகல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து தொகுதிகளிலும் நமக்கு சான்ஸ் இருக்கு அதை பயன்படுத்துங்கள் என சீனியர் அதிமுக நிர்வாகிகளுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட் எப்படி எடப்பாடி கைக்கு போனது என திமுகவினர் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.