மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 23 வயது மாற்று மதம் சார்ந்த நபர் ஒருவருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலானது. இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதில் 2021ல் சிறுமி கர்ப்பிணியானார்.
2021 செப்டம்பரில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுமியிடம் வழக்கறிஞர் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கி கொண்டார். இதன்பின் மற்றொரு 23 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த சூழலில் இந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது.
சிறுமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் சிறுமியின் முதல் கர்ப்பம் மற்றும் குழந்தை பற்றி அறிந்த அந்த வாலிபர், சிறுமியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்பு சிறுமிக்கு 2வது முறையாக கடந்த மார்ச்சில் குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தில் 16 பேருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.