அடப்பாவமே! என்ன ஆச்சு? திடீரென செயலிழந்து போன கூகுள்!

37

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்தனர். இங்கிலாந்தில் 300க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்டவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் டாக் ஆகியவை வேலை செய்வதாக தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 100 பயனர்கள் கூகுள் மேப்ஸில் சிக்கலை எதிர்கொள்வதாக தெரிகிறது.

இதுகுறித்து ஏராளமானோர் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். Google down என்ற ஹேஷ்டேக்கில் கூகுள் செயலிழப்பு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 502 பேஜ் error செய்தி காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.