திருமணத்தை நிறுத்தி மணமகனின் குடும்பத்தை சிறைபிடித்த மணப்பெண்!

27

பீகாரின் மஞ்சித் சவுத்ரி என்பவருக்கும், மனிஷா குமாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களுடைய திருமணம் குர்சேலாவில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் திருமண ஊர்வலத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் அனைவரும் இரவு வரை காத்திருந்துள்ளனர்.

ஆனால் மணமகன் உள்ளிட்ட யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் கோபமடைந்துள்ளார். பின்னர் மஞ்சித் சாலையில் காருக்குள் மயங்கிய நிலையில் போதையில் இருந்தது மனிஷாவுக்கு தெரியவந்தது.

மஞ்சித்தின் இந்த நிலையைமைப் பார்த்த மனிஷா, அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். மணமகனின் பெற்றோரைப் பிணைக் கைதியாக தாம் வைத்திருக்கப்போவதாகவும் மனிஷா அறிவித்துள்ளார். இதனால் பதறிப்போன மணமகனின் குடும்பத்தினர் திருமணத்துக்கு செலவான பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டுள்ளனர்.