Annamalai: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் செய்தார். அப்போது லஞ்சம் கொடுத்து தான் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பெண் ஒருவர் தன் குமுறலை கொட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதற்கு ஊராட்சி தலைவர் என்னிடம் லஞ்சம் வாங்கினர்கள். நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதலில் நேர்மையான ஊராட்சி தலைவர்களை நியமிக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் ஊராட்சி தலைவர்கள் கட்சி விட்டு கட்சி தாவி லஞ்சம் வாங்குவதையே வேலையாக கொண்டுள்ளனர். நீங்கள் நியாயமான ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுங்கள். மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் அவர்களுடைய பின்னணியை பாருங்கள் என அந்த பெண் கூறினார்.
பெண்ணுக்கு பதில் சொன்ன அண்ணாமலை இன்று நாம் தீர்வை நோக்கி சென்று வருகிறோம். பிரச்னை உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எங்கு பார்த்தாலும் லஞ்சம், லஞ்சம் என, வேட்டியை மட்டும் தான் இன்னும் உருவாமல் உள்ளனர். அரசியல் மாற்றம் இந்த தேர்தலில் இருந்து ஆரம்பிக்கட்டும். அதன் பின் உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை நிற்க வைப்போம் என பதில் கூறினார்.