தமிழக மக்கள் இன்னும் 2 வாரத்துக்கு தப்பிக்க முடியாது! – Heat Wave

25

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தற்போதுள்ள வெப்ப நிலை நீடிக்கும்.

கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். 5 அல்லது 10 நிமிடங்கள்தான் மழை பெய்யும். கன்னியாகுமரி, சேலம், ஏற்காடு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.