அதிமுக வேட்பாளர் பணம் 32 லட்சம் சிக்கியது எப்படி? – Erode ADMK

32

Erode ADMK: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் குமார். பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலராக உள்ளார். இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பத்து லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

கைப்பற்றப்பட்ட பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமாருடையது என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரம் முன் பாஜக நிர்வாகியிடம் பணத்தை அவர் ஒப்படைத்தது தெரியவந்தது. தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்த அசோக்குமார் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இவருக்கு நெருக்கம். இதனால் தான் பணமும் பாஜக பிரமுகர் வீட்டில் வைத்துள்ளார்.

பணம் பதுக்கப்பட்டது குறித்து திமுகவைச் சேர்ந்த சிலர் திருப்பூர் எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் நடத்திய சோதனையில் 31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இந்த பணத்தை நேரடியாக ஒப்படைப்பதில் சிக்கல் இருந்ததால், அந்த தொகுதியை சேர்ந்த பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.