Chennai Women: சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் பிரவீன். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஷர்மிளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பிப்ரவரி 24ல் மதுபான விடுதியில் பிரவீன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஷர்மிளா குடும்பமே ஆணவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஷர்மிளாவின் சகோதரரான தினேஷ் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். என்னுடைய தங்கை வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்டதால் பழி வாங்குவதற்காக கொலை செய்தேன் என கூறினார்.
பிரவீன் கொலை செய்யப்பட்ட பிறகு ஷர்மிளா மிகவும் மனவேதனையிலும் இருந்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான் கடந்த 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஷர்மிளா உயிரிழந்தார். இதுகுறித்தும் பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.