40 சதவீத கமிஷன் கேட்டால் எங்கிருந்து முதலீடுகள் வரும்? – Annamalai

30

Annamalai: ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கோவை இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து கவலை இல்லாமல் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களிடம் 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என கேட்டால் எப்படி வருவார்கள்? அடுத்து முதல்வர் மருமகனை நள்ளிரவில் சந்திக்க வேண்டுமாம்.

முதல்வரின் குடும்ப ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இப்படி இருந்தால் எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்? தங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும் மாநிலங்களுக்கு அவை சென்றுவிடும். தங்கள் மீது முழு தவறையும் வைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்க வேண்டாம் ஸ்டாலின்.

கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுக்கும் தொழில்துறையில் திமுக செய்து வரும் துரோகங்களை ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக சரிசெய்யும். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முக்கியப் பணி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் =.