Indonesia tsunami: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.