தோனி விளையாடவே வேண்டாம்: ஹர்பஜன் சர்ச்சை பேச்சு!

26

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி 9 ஆவது பேட்ஸ்மேனாக 19 ஆவது ஓவரில் களமிறங்கினார். தனது டி20 வாழ்க்கையில் முதன்முறையாக ஒன்பதாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். எங்கு இறங்கினாலும் தோனி, இறுதி ஓவர்களில் எப்படியும் 2 சிக்ஸர்களையாவது அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அவர் விக்கெட்டைப் பறிகொடுத்ததைத் தாண்டி, ஒன்பதாவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. எம்.எஸ்.தோனி 9 ஆவது இடத்தில் களமிறங்க விரும்பினால் அவர் விளையாடவே வேண்டாம். ப்ளேயிங் 11ல் அவரைத் தவிர வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்ப்பது நல்லது. பேட்டிங் செய்ய வராமல் தனது அணியை ஏமாற்றியுள்ளார்.

தோனிக்கு முன்னால் ஷர்துல் தாக்கூர் வந்தார். தோனியைப் போல அவரால் ஷாட்களை அடிக்க முடியாது. தோனி ஏன் இந்த தவறை செய்தார் என புரியவில்லை. அவர் அனுமதியின்றி எதுவும் நடக்காது. அவரை பின்னால் இறக்க வேறு யாரோ முடிவு செய்தார் என்பதை நான் ஏற்க தயாராக இல்லை என ஹர்பஜன் சிங் கூறினார்.