நடிகர் தனுஷ் தனது மகன் என கூறி வந்தவருக்கு நடந்த சோகம்! – Actor Dhanush

39

Actor Dhanush: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர். இவர்கள் நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என கூறி வந்தனர்.

எங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் தனுஷ் பிறப்புச் சான்றிதழ் போலியானது என கோர்ட்டில் கூறினர். இந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கதிரேசன் காலமானார்.