டெபாசிட்டை திருப்பித்தர வங்கி மறுத்ததால் முதியவர் விபரீத முடிவு!

22

கேரளத்தின் மருதத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சோமசாகரம் (52). அவர் பெரும்பழுதூர் கூட்டு றவு வங்கியில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தார். அத்தொகையைத் திருப்பித் தருமாறு அவர் பலமுறை வங்கி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். எனினும் அவரது பணத்தை திருப்பித்தர வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த 19ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோமசாகரம் தனது மகளின் திருமணத்துக்காக கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை திரும்பப் பெற முயன்றதாகவும் பணம் கிடைக்காததால் அவர் விஷம் குடித்ததாகவும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சோமசாகரத்தின் தந்தை இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், முன்வைப்புத் தொகையை திருப் பித் தருமாறு கடந்த 6 மாதங்களாக எனது மகன் கோரி வந்தார். ஆனால் வங்கி அதிகாரிகள் அத்தொ கையை திருப்பித் தரவில்லை. இறுதியில் அவர்கள் அவரை மிரட்டத் தொடங்கினர். வங்கி ஊழியர்களின் அணுகுமுறை காரணமாகவே என் மகன் தற்கொலை செய்து கொண்டார் என்றார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட வங்கியின் அதி காரிகள் கூறுகையில் ‘வங்கி நிதி நெருக்கடியில் உள் ளது.அதனால்தான்வாடிக்கையாளர்களின்கோரிக் கையை நிறைவேற்ற முடியவில்லை. எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளோம். சோமசாகரத்தின் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து வரும் ஜூன் 30ஆம் தேதிக் குள் அவரது பணத்தை திருப்பித்தர வங்கி ஒப்புக் கொண்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.