kerala woman: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட சரக்கு கப்பலை சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது.
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் தவித்துவரும் கேரள வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேசினார். இப்போது அதே கப்பலில் சிக்கியுள்ள கேரள மாநில பெண் ஆன் டெஸ்சா தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
கப்பலில் இருக்கும் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், உணவு சரியாக அளிக்கப்படுவதாகவும், ஆகவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அதன்பிறகே ஆன் டெஸ்சா குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். ஆன் டெஸ்சா பாதுகாப்பாக இருப்பதாக அவர் பணிபுரிந்த நிறுவன அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.