சென்னையில் விமானங்கள் மீது பாயும் லேசர் ஒளி!

34

சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவம் தண்டனைக்குரியது என்று இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது.

விமானங்கள் ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக, தாழ்வாக பறக்கும் போது விமானத்தை நோக்கி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட கலர்களில், அவ்வப்போது லேசர் லைட் ஒளி அடிக்கப்படுகிறது. இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது.

இந்த லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது பாய்ச்சும் போது, அது விமானியின் கண்களை நோக்கி பாய்வதால் விமானி ஒரு சில வினாடிகள் விமானத்தை இயக்குவதில் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர். ஆனாலும் விமானிகள் சமாளித்துக் கொண்டு விமானத்தை தரையிறக்குகின்றனர்.