Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் ஆய்வு என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணிக்கு கணிசமான தொகுதிகளும், அதிமுக, பாஜக கூட்டணிக்கு தலா ஒரு தொகுதியும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி முன்னிலை வகிக்கும் 37 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வாக்கு வேறுபாடு 4 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என தெரிகிறது. இதனால் இறுதி முடிவுகள் மாறலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மாறும்பட்சத்தில், பாஜக அணிக்கு 4 தொகுதிகளும் அதிமுக அணிக்கு 7 தொகுதிகளும் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதே போல 2026ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பையும் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ளது. அதில் திமுக ஆட்சி அமைக்க 31.8 சதவீதம் பேரும், அதிமுக ஆட்சி அமைக்க 21.5 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க 16.2 சதவீதம் பேரும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க 15.2 சதவீதம் பேரும், பாஜக ஆட்சி அமைக்க 10.1 சதவீதம் பேரும் விரும்புவதாக தகவல் வெளியானது.