தோல்வியிலும் சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு! – Dinesh karthik

35

Dinesh karthik: நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.

முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களாக இருந்தது. இப்போது 287 ரன்கள் அடித்தது மூலமாக தனது சொந்த சாதனையை முறியடித்தது சன் ரைசஸ் ஐதராபாத் அணி. இதை தொடந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் 5 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 35 பந்துகளில் 83 ரன்களை எடுத்து வெற்றியை நோக்கி சென்றார். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருந்தாலும் எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையாக 262 ரன் அடித்துள்ளது பெங்களூரு அணி.