Lorry Bus Clash: சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. விழுப்புரம் நகரில் இருந்து புறவழிச்சாலையில் 28 பயணிகளுடன் பேருந்து ஏற முயன்றது. அப்போது ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
அரசு பேருந்து சாலையில் இருந்து இறங்கி பள்ளத்தில் சொருகியது. அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடி ரோட்டுக்கு ஓடி வந்தனர். நல்ல நேரமாக எதிர் திசையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்து காயம் அடைந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவரை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.