Mansoor Ali Khan: கடந்த சில நாட்களுக்கு முன் குடியாத்தம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். திடீரென மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
டாக்டர்கள் ஆலோசனைகளையும் மீறி, தான் போட்டியிடும் வேலூர் தொகுதி மக்களை பார்க்க மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிகிறது.