கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, ஆனி ராஜா சுரேந்திரன் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில், மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களை மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியது தொடர்பாக வெளியான வீடியோ மக்களிடையே தற்போது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 6 மணி அளவில் வயநாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலை தேயிலைத் தோட்டத்திற்கு 4 மாவோயிஸ்டுகள் வந்து சென்றுள்ளனர். கைகளில் துப்பாக்கிகளுடன், அவர்களின் சீருடைகளில் வரும் அவர்கள் 20 நிமிடத்திற்கும் மேலாக மக்களிடம் பேசியுள்ளனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டாம். அரசு தரப்பில் இருந்து தொழிலாளர்களாகிய நமக்கு எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக மருத்துவம் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதில்லை என்று கூறியுள்ளனர்.