கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீதா. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
மாந்தோப்பு உரிமையாளரான பிரகாஷ் என்பவருடன், சீதா தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சீதாவின் கணவர் பிரகாஷின் மாந்தோப்புக்கு தன் உறவினர்களுடன் சென்று மனைவியை தன்னுடன் வாழ வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆந்திரமடைந்த பிரகாஷ் மாந்தோப்புக்குள் நுழைந்தவர்களை துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்கு சீதாவின் கணவர் சீதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக மாந்தோப்பு உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.