Mumtaj: 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக எட்டி பார்த்தவர் மும்தாஜ். கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா பாடலில் அதகளம் பண்ணியிருப்பார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதன்பின் 2 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு சினிமா பக்கமே எட்டி பார்க்கவில்லை. அதன்பின் கடந்த 8 வருடங்களாக சினிமாவில் மும்தாஜை பார்க்க முடியவில்லை. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் மும்தாஜ் நான் கவர்ச்சி உடைகளை அணிந்து தவறு செய்துவிட்டேன். இப்போது மனசாட்சி உறுத்துகிறது. தினமும் வீட்டில் இதற்காக அழுது கொண்டிருக்கிறேன். என் கையில் மட்டும் நிறைய பணம் இருந்தால் நான் நடித்த எல்லா படங்களின் உரிமையையும் வாங்கி அதில் இருக்கும் என் கவர்ச்சி காட்சிகளை நீக்கிவிடுவேன்.
கூகுளில் இருந்தும் என் கவர்ச்சி புகைப்படங்களை நீக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் அது முடியாது. எனக்கு இனிமேல் திருமணமாகும் என்கிற நம்பிக்கை எல்லாம் இல்லை. நடந்தால் பார்ப்போம். ரசிகர்கள் தயவுசெய்து என் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரப்பாதீர்கள் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.