Nestle Milk Powder: ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் Nestle அதிக சர்க்கையை சேர்க்கப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற நாடுகளில் குறைந்த அளவே காணப்படுகிறது. இந்த விஷயத்தில் நெஸ்ட்லே இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சுவை, தரம் பாதுகாப்பு மாறாமல், சர்க்கரை அளவு குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் செர்லக் என்ற குழந்தை உணவுகளில் ஒரு கிண்ணத்துக்கு 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவே தாய்லாந்தில் 6 கிராமாகவும், எத்தியோப்பியாவில் 5.2 கிராமாகவும், தென்னாப்பிரிக்காவில் 4 கிராமாகவும் உள்ளது. அதுவே, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பூஜ்ஜியமாக உள்ளது.