சூரத் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் இருந்த சாட்சி கையெழுத்துகள்,
தங்களுடையது இல்லை என 3 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில், கும்பானியை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறது காங்கிரஸ்.
ஒன்று அவர் பாஜகவுக்கு உடைந்தையாக செயல்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் கவனக் குறைவாக இருந்திருக்க வேண்டும் என காரணம் கூறியிருக்கிறது காங்கிரஸ்.