Seeman: நாமக்கல் மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் சீமான் பேசினார். எனக்கு 15 சீட் 1,000 கோடியும் தருவதாக கூட்டணிக்கு கூப்பிட்டாங்க. ஆனால் நான் போகல என கூறினார்.
2026ல் நீங்கள்தான் முதலமைச்சர் எனக் கூப்பிட்டார்கள். குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருவதாகவும் சொன்னார்கள். தெருக்கோடியில் கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன் என சீமான் பேசினார்.
தொடர்ந்து திராவிட கட்சிகளுக்கு ஓட்டுபோட்டு எங்களை ரோட்டில் போட்டதுதான் மிச்சம். மக்கள் மீதான அக்கறையில்தான் கொளுத்தும் வெயிலை பார்க்காது நான் பேச வந்திருக்கிறேன். 15 ஆண்டுக்காலமாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்? கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி? ஒரு இழவும் கொடுக்கவில்லை என சீமான் மக்களை திட்டினார்.