இரவில் நண்பருடன் தூங்க சென்றவருக்கு நடந்த சோகம்! – Tasmac

28

Tasmac: திண்டுக்கல் வத்தலகுண்டு புதுப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கிறார். பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் நாகராஜ் என்பவருடன் ஆனந்த குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பணி முடிந்து முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

திங்களன்று இரவு உறங்கச் சென்ற ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிணமாகக் கிடந்துள்ளார். போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனந்தகுமாரும் அவரது நண்பர் நாகராஜ் மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. மது போதையில் இருந்த நாகராஜ் துண்டை வைத்து ஆனந்தகுமாரை கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை தனிப்படை அமைத்து போலீசார் பிடித்தனர்.