ஊட்டியில் 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான வெயில்!

24

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு 28.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் பின்னர் 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வெப்பம் உச்சத்தை தொட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. இதனால் கடந்த 73 ஆண்டுகளில் ஊட்டி இன்றுதான் மிக வெப்பமான நாளை எதிர்கொண்டிருக்கிறது.

இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29°C செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என சென்னை வானிலை மையம் கூறியது.