மொத்தமாக லீவ் எடுத்த பைலட்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிர்ச்சி!

25
Representation

ஏர் இந்தியாவின் துணை நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். டாடா நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ளது. டாடா நிறுவனம் சமீபத்தில் பணி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது. பைலட்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திடீரென பைலட்கள் அனைவரும் உடல்நலக்குறைவு எனக்கூறி லீவ் எடுத்துவிட்டு தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

இதனால் வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கும் செல்ல வேண்டிய 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து பல பயணிகள் விமான நிலையங்களை வந்தடைந்த பிறகே தெரியவந்தது. இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தங்களின் கோபம் மற்றும் அதிருப்தியை சமூக வலைதளங்கள் மூலம் தெரியபடுத்தி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பயணிகளின் பணம் திருப்பி தரப்படும் அல்லது வேறு தேதிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.