ECI: நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 228 மையங்களை தேர்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. அது கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது.
61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.