மோடி மீண்டும் பிரதமராக வேண்டி விரலை கட் செய்து கொண்ட வாலிபர் – PM Modi Finger

39

PM Modi Finger: பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய விரலை துண்டித்துக் கொண்டார்.

கர்நாடகா மாநிலம் சோனார்வாடா பகுதியைச் சேர்ந்தவர் அருண் வர்ணேகர். இவர் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி பூஜை, வழிபாடு செய்து வருகிறார்.

இப்போது மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என வேண்டிக்கொண்டார். வேண்டுதலை நிறைவேற்ற தனது விரலை துண்டித்துள்ளார்.

அப்போது வெளியேறிய ரத்தத்தை கொண்டு காளிமாதா மோடியைக் காக்க என எழுதியுள்ளார். மோடிக்காக அருண் செய்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.