இனி தெருநாய்களுக்கும் ஆதார் கார்டு வருகிறது!

27

டெல்லியில் சுமார் 100 நாய்களுக்கு அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட்ட க்யூ ஆர் அடிப்படையிலான சிறப்பு ஆதார் கார்டுகள் வரவேற்பு பெற்றுள்ளன. முதல் கட்டமாக சுமார் 100 நாய்கள் தங்களுக்கான க்யூ ஆர் அடிப்படையிலான ஆதார் அட்டை அடையாளங்களை பெற்றுள்ளன.

ஆதார் அட்டை என்று பெயரளவில் சொல்லப்படும் இவற்றுக்கும் ஆதாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் பிரபலமான தனிநபர் அடையாளச் சான்றாக புகழ்பெற்றிருக்கும் ஆதார் கார்டுக்கு நிகரான ஏற்பாடு என்பதால் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

இந்தியா கேட், டெல்லி விமான நிலையம் போன்ற டெல்லியின் அடையாளமான பிரதான இடங்களில் இவை பரிசோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளன.