என்னது டிரெஸ்சே ஹேன்ட் பேக் மாதிரி இருக்குது?

24

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரைசா வில்சன். பிறகு பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த சீசனில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் நெருங்கி பழகி வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

ரைசா வில்சனுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் லைட் க்ரீன் கலரில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.