ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: புல்லரிக்க வைக்கும் வீடியோ! – Ram Temple

25

Ram Temple: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலில் ராம் நவமி விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. ராம் நவமி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று சூரிய அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சரியாக 12.16 மணிக்கு கோவில் கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

சூரிய ஒளி ராமரின் நெற்றியில் நேரடியாக விழும் அளவிற்கு நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர் ராமர் கோவில் வடிவமைப்பாளர்கள். கண்ணாடிகள், லென்சுகள் கொண்டு இந்த வடிவமைப்பு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த சூரிய ஒளி ராமரின் நெற்றியில் சும்மர் 75 மில்லி மிட்டர் அளவு விழும்படியாக வடிவமைத்துள்ளனர். அதேபோல் இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். 5 நிமிடமே நீடிக்கும் இந்த அறிய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோவிலில் கூடினர்.