பெங்களூரு அணி எப்போ கப் அடிக்கும்? கணித்து சொன்னது AI – Royal Challengers

51

Royal Challengers: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கோப்பை வெல்ல உள்ள அணிகள் எது என்பது குறித்த பட்டியல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை கண்டவுடன் அனைவரின் கண்களும் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளதா என்று தேடியிருக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2029 மற்றும் 2038ம் ஆண்டுகளில் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லதா பஞ்சாப் கிங்ஸ் அணி 2028 மற்றும் 2040 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.