அர்ஜெண்டினாவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒன்றில் 60 வயதான Alejandra Marisa Rodriguez வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் வரலாற்றிலும் இடம்பிடித்து உள்ளார். ந்தப் போட்டியில் 18 முதல் 73 வயது வரை உள்ள 34 பெண்களுடன் அவரும் போட்டியிட்டார்.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாண லா பிளாட்டாவைச் சேர்ந்த இந்த அலெஜாண்ட்ரா ஒரு வழக்கறிஞர். சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். தற்போது மருத்துவமனை ஒன்றில் சட்ட ஆலோசகராக உள்ளார்.
அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான். இதற்கு முன்புவரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பு கடந்தாண்டு நீக்கப்பட்டது.