School Bus Accident: ஹரியானா மாநிலம் நர்னால் பகுதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து பள்ளி பேருந்து கிளம்பியது. வழியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கனினா பகுதி அருகே உன்ஹானி கிராமம் வந்தபோது பேருந்து திடீரென விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான பள்ளி பேருந்தின் தகுதி சான்றிதழ் 2018ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. பள்ளி பேருந்து இயக்கிய டிரைவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரம்ஜான் விடுமுறை தினத்திலும் விடுமுறை விடாமல் பள்ளியை இயக்கியதாக அதிகாரிகள் பள்ளி மீது குற்றம் சாட்டினர்.