செந்தில் பாலாஜி தான் எல்லாமே: ஷாக் தந்த நேருவின் பேச்சு – Senthil Balaji

30

Senthil Balaji: பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கேஎன் நேரு பிரச்சாரம் செய்தார்.

திருச்சி மக்களவை தொகுதி திமுகவுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் நினைப்பது நடந்திருக்கும். கடைசி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எல்லாருடனும் இருந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என நாங்கள் நினைப்போம். மிக பெரிய சமூகமாக முத்தரையர் இருக்கிறீர்கள். நாங்களும் உங்களை ஒட்டித் தான் இருப்போம். வாய்ப்பு வரும் போது பெரிய அளவுக்கு இந்த சமூகம் வரும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இது மிக முக்கியமான தேர்தல். செந்தில் பாலாஜி இல்லாததால் அந்த வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதும் அவர் தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் நேரு பேசினார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி இப்போது சிறையில் இருக்கிறார்.