Less Sleep: அமெரிக்கன் கார்டியாலஜி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்து ஆய்வு நடத்தினர். இதற்கு முந்தைய ஆய்வுகள் குறைவான தூக்கத்தினால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என கூறி இருந்தாலும் அதற்கான சான்றுகள் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை. இப்போது நடத்தப்பட்ட ஆய்வு அதனை உறுதி செய்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் இல்லாத 6 நாடுகளைச் சேர்ந்த 10 லட்சம் பேர் ஆய்வில் கலந்து கொண்டனர்.
ஜனவரி 2000 முதல் மே 2023 வரை நடத்தப்பட்ட 16 ஆய்வுகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டது. வயது, பாலினம், கல்வி, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் போன்ற காரணிகளை சரிசெய்தாலும் தூக்கம் சரியாக இல்லாவிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என கண்டுபிடிக்கப்பட்டது. 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் 7 சதவிகித உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு அது 11 சதவிகிதமாக அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.