Bus Step Broke: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு டவுன் பேருந்து ஒன்று முடங்கியாறு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது தாசில்தார் ஆபீஸ் அருகே சென்றபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.
நல்லவேளையாக படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் உடைந்த படிக்கட்டை கண்டக்டரும், டிரைவரும் சேர்ந்து தூக்கி சென்று பேருந்துக்குள் போட்டனர். அதை பணிமனைக்கு எடுத்து சென்றனர்.
பேருந்து படிக்கட்டு உடைந்து ரோட்டில் விழுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற பேருந்துகளால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்றும், நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.