நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: அமலுக்கு வந்தது அபராதம்!

24

வாகனங்களில் விதிகளை மீறி தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுபவர் மீது அபராதம் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அனுமதி இல்லாமல் ஏதேனும் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகண சட்டத்தின் படி 500 ரூபாய் அபராதம் விதிக்கபப்படும்.

எச்சரிக்கையை மீறி வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் அகற்றவில்லை என்றால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம் 1988ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை கூறியது.