பொதுவாகவே உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 98.6 டிகிரி பாரன்ஹீட். இதைவிட உடல் அதிக வெப்பநிலையில் இருந்தால், உடலில் சூடு அதிகமாகிவிட்டது. உடலின் வெப்பநிலை 106 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதே ஹீட்ஸ்டோர்க். வெப்பம் அதிகமாகும் போதெல்லாம் உடலே வெப்பத்தை தணித்துவிடும்.
அதிகமான வேர்வையை வெளித்தள்ளி உடலில் இருக்கும் சூட்டை உடலே குறைத்துவிடும். ஆனால் வேர்வையை வெளித்தள்ளும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், உடலில் வெப்பம் அதிகமாகி ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும்.
முதலில் தலைவலி ஏற்படும். பின் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், சுயநினைவை இழப்பார்கள். படபடப்பு ஏற்படும், மூச்சு அதிகமாக இழைக்கும், நெஞ்சுவலி ஏற்படும், ரத்த அழுத்தம் குறையும். உடலின் சருமம் வறண்டுவிடும், வேர்வையே வராது. இதை தடுக்க உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.