Share market Loss: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்தியா. சந்தியா 8 மாத கர்ப்பிணி. விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் அவரது தாயும் உதவிக்காக அவர்களுடன் தங்கி இருந்தார்.
விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதிக அளவில் கடன் வாங்கி அதில் முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்கு சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் அதிகரிக்கவே அதனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு விஜயகுமாரும் அவரது மனைவி சந்தியாவும் அறைக்கு தூங்க சென்றனர். ஆனால், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாயார் கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.