Seeman: கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்தூர், பர்கூரில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, பாட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என கூறினார்.
உடனே சீமான் ஆதரவாளர்கள் ஓடிவந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி கிறுக்கு பய! லூசு பய! என திட்டினார். பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.